Burns Centre
Burns & Trauma Care Unit
FAQ in Burns
Audio 1
Audio 4
Audio 7
Audio 2
Audio 5
Audio 8
Audio 3
Audio 6
Audio 9
தீ சூடான திரவங்கள் மற்றும் நீராவி மின்சாரம் இரசாயன பொருட்கள்.
வீட்டில் மற்றும் தொழிற்ச்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் பட்டாசுகளால் ஏற்படும் விபத்துக்கள் வாகன விபத்து தீப்பெட்டியுடன் விளையாடுதல் சமையல் அறையில் ஏற்படும் திரவ விபத்துக்கள்.
காயத்தின் ஆழம், காயத்தின் பரப்பு.
இது நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது. முதல் அளவு நீர் குமிழ்கள் காணப்படாது. தோலின் நிறம் மாற்றம் மட்டும் காணப்படும். இரண்டாம் அளவு நீர் குமிழ்கள் காணப்படும். வலி உண்டாகும். மூன்றாம் அளவு இதில் முழு ஆழத்தில் தோல் பாதிக்கப்படுகிறது. நரம்புகள் பாதிக்கப்படுவதால் தோலில் வலி காணப்படுவதில்லை. நான்காம் அளவு தோலுக்கும் கீழ் சதை மற்றும் எலும்பு வரை உண்டான காயங்கள்.
இது Rule of 9’s என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு உள்ளங்கையின் பரப்பளவு ஒரு சதவீதத்திற்கு (1%) சமமாகிறது.
புகை, நீராவி, சூடான காற்று, மற்றும் இரசாயன புகையை சுவாசிக்கும் போது நுரையீரலின் சவ்வு பாதிக்கப்படுகிறது. இதனால் பிராணவாயு உள்வாங்கும் தன்மை பாதிக்கப்படுகிறது. ஒரு சராசரி மனிதனின் பிராணவாயு உள்வாங்கும் சவ்வின் அளவு ஐந்து சென்ட் நிலப்பரப்பு அளவிற்கு ஈடானது. தீக்காயத்தின் போது முகத்தில் காயம் ஏற்பட்டாலோ, மூக்கின் முடி, புருவங்கள் கருகிவிட்டாலோ, நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.
தீவிபத்தின் போது கார்பன் மோனாக்ஸைடு வாயுவை சுவாசிப்பதனால் இரத்தத்தில் விஷத்தன்மை கூடி உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தோல் நிறமாற்றம் நீர் கொப்புளங்கள் தோல் உரிதல் Shock (இரத்த அழுத்த குறைவு, நாடித்துடிப்பு கூடுதல், அதிகமான வியர்வை, மயக்க நிலை, கை மற்றும் கால் விரல்கள் நீல நிறமாக மாறுதல்).
தலை, முகம், கழுத்து, புருவங்கள் மற்றும் மூக்கில் உள்ள முடி கருகிவிடுதல்.
இருமல், மூச்சுத்திணறல், கருப்புநிறம் மற்றும் இரத்தம் கலந்த சளி, குரல் மாற்றம், இளைப்பு.
காயத்தின் ஆழம், காயத்தின் பரப்பளவு, நுரையீரல் காயம், கார்பன் மோனாக்ஸைடு விஷவாயுவின் அளவு, நீரிழிவு, HIV.
ஆபத்து குறைந்த தீக்காயம் (Minor Burns) 15% க்கும் குறைந்த பரப்பளவுள்ள தீக்காயம், அல்லது நுரையீரல் காயம் மற்றும் கார்பன் மோனாக்ஸைடு விஷவாயு பாதிப்பு இல்லாத பட்சத்தில் ஆபத்து குறைந்த தீக்காயம் (Minor Burns) என்றும் கருதப்படுகிறது. ஆபத்தான தீக்காயம் (Major Burns) 15% க்கும் அதிக பரப்பளவுள்ள தீக்காயம், அல்லது கார்பன் மோனாக்ஸைடு விஷவாயு பாதிப்பு மற்றும் நோயின் தாக்கம் உள்ளவர்கள் (நீரிழிவு நோய்) உள்ள தீக்காயம் ஆபத்தான தீக்காயம் (Major Burns) என்றும் கருதப்படுகிறது.
CAB
C – Circulation உடனடியான இரத்த நாளம் வழியாக ஐஏ குடரனை செலுத்தவும்.
A – Airway சுவாச வழிகளில் அடைப்பு உள்ளதா என்பதை அறியவும்.
B – Breathing பாதிக்கப்பட்டவரின் சுவாசத்தை நிர்ணயித்து அதற்கு ஏற்றவாறு ஆக்ஸிஜன் அல்லது செயற்கை சுவாசம் தர வேண்டும்.
சிகிச்சையின் போது வலி கூடினாலோ, தோலில் சிவப்பு நிறம் ஏற்பட்டாலோ, வீக்கம் ஏற்பட்டாலோ, சலம் ஏற்பட்டாலோ, சிறுநீரின் அளவு குறைந்தாலோ, தலைவலி, தலைசுற்றல், வாந்தி, ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவர் உதவியை நாடவேண்டும்.
முதல் உதவிக்குப் பிறகு டீரசளெ ஊநவெநச க்கு அனுப்பவும். தீக்காயம் அடைந்தவர் முதலில் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டபொழுது தேவையான இரத்தப்பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, நெஞ்சுப்படம் (X-Ray), இதய ஸ்கேன் (ECHO), போன்றவைகள் மூலம் அவரின் தற்போதைய நிலையை நிர்ணயிக்க முடியும்.
தீக்காயத்தினால் உடம்பின் நீர்சத்து குறைவதால் இரத்த நாளத்துக்குள் திரவம் செலுத்த வேண்டும். திரவ அளவு நிர்ணயிக்க Parkland formula என்பதன் படி தீக்காயத்தின் சதவீதம், உடல் எடை வைத்து மொத்த அளவில் ஒருபாதியை முதல் 8 மணி நேரத்திலும் இன்னொரு பாதியை அடுத்த 16 மணி நேரத்திலும், அடுத்த நாள் மொத்த அளவில் பாதி என்றும் பகுத்து அளிக்க வேண்டும். தாதுஉப்புகள் சோடியம், பொட்டாசியம், போன்றவைகளின் அளவை சரிசெய்ய வேண்டும். அமிலகார சமன் சீர்செய்ய வேண்டும்.வலிக்கு தக்க வலிநிவாரணம் வழங்க வேண்டும். சத்தான உணவு புரதம் அதிகமுள்ள உணவு வழங்க வேண்டும். T.T எனப்படும் தடுப்பூசி போடவேண்டும். தீக்காயத்தின்மேல் Silver Sulfadiazine எனப்படும் களிம்பு தடவவேண்டும் தேவைபட்டால் நோய்கொல்லி மருந்துகள் களிம்புகள் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்டவருக்கு உடற்பயிற்சி சிகிச்சை அளிக்க வேண்டும்.
Collagen எனப்படும் செயற்கை தோலை இடலாம். Excision and Grafting பாதிக்கப்பட்டவருக்கு பலநிலைகளில் தோல் அகற்றப்பட்டு மாற்றுத்தோல் பொருத்தப்படுகிறது.
காயத்தின் ஆழம், காயத்தின் பரப்பளவு, நுரையீரல் தீக்காயம் நீரிழிவு, இரத்த அழுத்தம், காசநோய் போன்ற உடனிருக்கும் நோய்கள் நுரையீரல் காயம் ஏற்பட்டவர்கள் 50மூ மேல் உள்ளவர்கள் முதல் வாரத்திலும் மற்ற ஆபத்தான தீக்காயம் உள்ளவர்கள் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மூன்று வாரங்களுக்கு மேல் உயிர்பிழைத்தவருக்கு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு குறைவு.
காயங்கள் ஆறிவரும்போது வடுக்கள் ஏற்படுவதினால் கை, கால், கழுத்து அசைவுகள் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய நேரிடலாம்.
தோல் மீதான நுpiவாநடயைட வுளைளரந உள்ளவரை வடு ஏற்படாமல் இருக்க வாய்ப்புள்ளது. காயங்கள் (Healing by Primary Intension) Epithelial Tissue உதவியுடன் ஆறும் போது வடுக்கள் ஏற்பட வாய்புகள் குறைவு Skin Grafting (மாற்றுத் தோல் ஒட்டுதல்) தோல் ஒட்டுவது இல்லாமல் Epithelial Tissue இல்லாமல் வடுவுடன் ஆறும். வடுக்களை குறைப்பதற்கு Gel, Gel Sheet மற்றும் ஊசிமூலம் செலுத்தும் மருந்துகள் உள்ளன. ஆறுமாதத்திற்கு மேல் வளர்ந்து வரும் வடு Keloid எனப்படும். Keloid ஏற்படும் பட்சத்தில் தீக்காய சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையை அனுகவும்.ஆறாத காயங்களில் Marjolin Ulcer என்ற புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.